advertisement

கோவில்பட்டி: வாலிபர் தற்கொலை

நவ. 03, 2026 6:30 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த   மாதவன் (வயது 23). இவரது தாய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், மாதவன் தனது அத்தை மாரியம்மாள் வீட்டில் தங்கி கேட்டரிங் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மாதவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு கடும் மதுபோதையில் இருந்த மாதவன், வீட்டின் அருகே சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து, உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாதவனின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement