திருப்பூரில் அதிமுக எம்.எல்.ஏ தோட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொலை.!
ஆக. 06, 2025 3:21 முற்பகல் |
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டத்தில் பணியாற்றும் தந்தை மகனுக்கு இடையே தகராறு என கேள்விப்பட்டு தாராபுரம் அடுத்த அலங்கியம் தளவாய் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் அங்கு சென்றுள்ளார்.
அப்போது எம்எல்ஏ தோட்டத்தில் பணியாற்றும் 2 பேர், சப் இன்ஸ்பெக்டரை விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கருத்துக்கள்