துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தூத்துக்குடி மேயர் அஞ்சலி
மே 22, 2025 11:03 முற்பகல் |
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது உருவ படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி மலர் தூவி, வீரவணக்கம் செலுத்தினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்