advertisement

தூத்துக்குடியில் மே 23 ல் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மே 22, 2025 12:18 பிற்பகல் |

 

தூத்துக்குடியில் வருகிற 23ஆம் தேதி முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கனை சார்ந்தோருக்கான  சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு 23.05.2025 அன்று  மாலை 03.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெறவுள்ளது. 

இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த சுயதொழில் புரிய ஆர்வமுள்ள முன்னாள் படைவீரர்கள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். மேலும், சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்துகொண்டு தங்கள் மனுக்களை இரட்டைப் பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொள்கிறார். மேலும், விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement