விளாத்திகுளத்தில் ஜமாபந்தி - இ-பட்டா வழங்கல்
மே 23, 2025 2:41 முற்பகல் |
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 30 பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் வருவாய் தீர்வாய முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளாத்திகுளம் வட்டத்தைச் சேர்ந்த மக்கள் முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, உழவர் அட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இதில் ஏற்கனவே 3 பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் இன்று புதிதாக 30 இலவச வீட்டுமனை மனுக்கள் பரிசோதனை செய்யப்பட்டு பயனாளிகளுக்கு இ-பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு பிரிவு) சங்கரலிங்கம் வழங்கினார்.
கருத்துக்கள்