படுகொலை செய்யப்பட்ட கவின் பெற்றோருக்கு எம்.பி. கனிமொழி நேரில் ஆறுதல்
ஜூலை 31, 2025 5:49 முற்பகல் |
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியில் உள்ள ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார் எனத் தெரிவித்தார்.
சுர்ஜித் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தாயாரும் கைது செய்யப்பட வேண்டும் என கவின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
கனிமொழி எம்.பி. எக்ஸ் பதிவு
ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் அவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க கழக அரசு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தேன் என பதிவிட்டுள்ளார்.
கருத்துக்கள்