advertisement

சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் நூறு நாள் திட்ட மோசடி !-பொதுமக்கள் கொந்தளிப்பு

ஜூலை 31, 2025 9:44 முற்பகல் |

சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் நூறு நாள் திட்ட மோசடி – குடிநீரையே  வழங்காமல்   இது போன்ற அரசு பணிகளில் அரசு பணத்தை திருடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என பொதுமக்கள் கொந்தளிப்புடன் கூறினார்கள். 

சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் நூறு நாள் திட்ட நிதி மோசடி தொடர்பான புகார்கள் மீண்டும் எழுந்துள்ளன.தங்கம்மாள்புரம் கிராமம் புல எண் 83/6-இல் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி 2025–26 ஆம் நிதியாண்டில் ஒப்புதல் பெற்றது. ஆனால் 31/07/2025 வரையிலும் நிலத்தில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. இருந்தும், “பணி முடிந்தது” என ஆவணங்களில் பதிவு செய்து, வேலைக்காரர்களுக்கு ரூ.20,416/- மற்றும் பொருட்களுக்கு ரூ.14,080.41/- என மொத்தம் ரூ.34,496.41/- செலவிட்டதாகக் காட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும், முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா அளித்த புகாரில், சேர்வைக்காரன்மடம் கிழக்கு தெரு சாலை அமைக்காமல் சிவஞானபுரத்தில் அமைக்கப்பட்டதாக (Complaint ID: TN/RDPR/TUT/P/PORTAL/17JUL25/12344522) குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், தங்கம்மாள்புரம் விளையாட்டு மைதானம், நம்மாழ்வார் நகர் பிரதான சாலை மற்றும் தங்கம்மாள்புரம் பஸ் ஸ்டாண்ட் மேல்புறம் தெரு ஆகிய பணிகளுக்கு வேலைக்காரர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாகக் காட்டப்பட்டாலும், எந்தப் பணியும் நடைபெறவில்லை (Complaint ID: TN/RDPR/TUT/P/PORTAL/07JUN25/11909786).இந்த புகார்களுக்கு 03/07/2025 அன்று “விரைவில் தொடங்கப்படும்” என மழுப்பலான பதில் அளிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இப்படியே மேற்படி நிர்வாகம்“ஊராட்சி மக்களுக்கு கிடைக்க வேண்டிய பணிகளை தடுத்து, ஆவணங்களில் போலி பதிவுகள் செய்து நிதி முறைகேடு செய்வது எம் மக்களின் உரிமைகளை பறிப்பதாகும்” என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்  தாமதமின்றி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும்  பணிகள் முடிவு பெற்றதாக கூறப்பட்ட மேற்கண்ட புல எண்ணில் அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் ஏமாற்றி பணி செய்யாமல் இருக்க 31/7 /2025 முதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை  எந்த பணிகள் நிர்வாகம் அத்துமீறி செய்யகூடாது தடை விதிக்க வேண்டும்.மீறினால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு முதல்வரின்  கவன ஈர்ப்பு நடவடிக்கை  மேற்கொள்வோம்  என சமூக ஆர்வலர்கள் தங்கம்மாள்புரம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். பல வருடங்களாக தங்கம்மாள்புரம் புதுத் தெரு மற்றும் தேரி செல்லும் பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் சரியாக வருவதில்லை,சட்டமன்ற உறுப்பினர் திட்டத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று வரை திறக்க வில்லை.

அதற்கு திட்ட அறிக்கை படி பணியாளர் நியமிக்கபடவில்லை. மாறாக அரசு பணத்தை திருடும் நிலையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதையெல்லாம் செய்து தராமல் அரசு எம் இளைஞர்களுக்கு அளித்த  விளையாட்டு மைதானம் பணிகளை செய்ததாக பணம் ஒப்புதல் அளித்த திருட்டு கும்பல்கள் மீது  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை  எடுக்கவேண்டும். புதுத் தெரு மக்களுக்கு குறைவில்லாத தண்ணீர் அளிக்கவேண்டும்.மேற்படி அதிகாரிகள் கூற்றை கேட்காமல் அந்த தெரு மக்களிடம் நேரடி கள விசாரணை நடத்த வேண்டும்  தண்ணீர் அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement