திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணிதிருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது. இதனை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து, காலை 5.30 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய சிவக்குமார் வல்லவராயர் கொடியினை ஏற்றினார்.அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி காலை 6.45 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்