advertisement

தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் புஷ்பாஞ்சலி பூஜை

ஆக. 06, 2025 2:46 முற்பகல் |

 

தூத்துக்குடி மேலூர் அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோவிலில் 30வது ஆண்டு புஷ்பாஞ்சலி பூஜை விழா நடந்தது.  

இதையொட்டி  காலையில் மாரியம்மனுக்கு புஷ்பபாவாடை அலங்காரமும் தீபாரணை நடந்தது அதன்பின் சிறப்பு அபிஷேகம் அலங்கார திபாரணையும் நடந்தது. மாலையில் புஷ்பாஞ்சலி அலங்காரம் செய்யப்பட்டு நவ கன்னிகா பூஜை மற்றும் சிறப்பு அலங்கார தீபாரனை நடந்தது. கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. 

பூஜைகளை கோவில் பட்டர்கள் சிவா மற்றும் குரு ஆகியோர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் தக்கார் தமிழ் செல்வி செயல் அலுவலர் ராதா முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன் முன்னாள் அறங்காவலர் மகாராஜன் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உஷா தேவி சண்முகசுந்தரம் மணிகண்டன் கோபால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement