கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை.
அக். 18, 2025 9:12 முற்பகல் |
தூத்துக்குடி மாவட்டம் உப்பாற்று ஓடை நீர்வழிப் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கோரம்பள்ளம் குளத்திற்கு காலை 5.45 மணி அளவில், 1000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கோரம்பள்ளம் குளத்தின் பாதுகாப்பான நீர்மட்டத்தை பராமரிக்கும் பொருட்டு 1500 கன அடி தண்ணீர் குளத்தில் இருந்து திறக்கப்பட்டுள்ளது.
கோரம்பள்ளம் குளத்தின் வடிகால் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மழை நிலவரம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வெள்ள நீர் கட்டுப்பாடு செய்யப்பட்டு வருகிறது
கருத்துக்கள்