ஆயுதப்படை காவல்துறை கவாத்து பயிற்சி - தூத்துக்குடி எஸ்பி., நேரில் பார்வை
அக். 18, 2025 11:28 முற்பகல் |
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு, ஆயுதப்படை போலீசாருக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து இன்று (18.10.2025) காலை நடைபெற்றது. மேற்படி கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். பின்னர் ஆயுதப்படை காவல்துறையினருக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
கருத்துக்கள்