தூத்துக்குடி : பத்திரகாளியம்மன் கோவிலில் 401 திருவிளக்கு பூஜை
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 401 திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெற்ற இந்தப் பூஜையில், உலக நன்மைக்காக. நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழிக்கவும், வறட்சி நீங்கவும் உலகில் அன்பு, அமைதி நிலவவும், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி சிறப்பாக அமைய வேண்டியும், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழவும் பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது.
விழாவில் கோவில் செயலாளர் கார்த்திக்ராஜா, பொருளாளர் செல்வராஜ், துணைத்தலைவர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், திருப்பணி கமிட்டி முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம், மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அர்ச்சகர் ஆறுமுகச்சாமி செய்திருந்தார்.





கருத்துக்கள்