பெங்களூருவில் சுவர் இடிந்து 8 பேர் பலி...! - பிரதமர் மோடி உருக்கம்...!
வட கர்நாடகத்தின் ராய்ச்சூர், பல்லாரி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் சமீப நாட்களாக 100 டிகிரியை மீறிய கொதிநிலை வெயில் மக்கள் வாழ்வை சிரமப்படுத்தியது. கடும் வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை உருவானது.
பெங்களூருவில். சூறைக்காற்றின் தாக்கத்தில் பல இடங்களில் பெரிய மரங்களும் கிளைகளும் முறிந்து விழுந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது சரிந்து விழுந்ததால் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
முறிந்த மரங்களை அகற்ற மாநகராட்சி பணியாளர்கள் விரைவாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.கோடை வெப்பத்தில் தவித்த மக்களுக்கு, இரவு 7 மணி வரை நீடித்த கனமழை சற்று நிம்மதியை அளித்தாலும், அதே மழை ஒரு துயரச் சம்பவத்தையும் ஏற்படுத்தியது. பெங்களூருவில் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மழையில் தஞ்சம் தேடியவர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.
ந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கனமழையால் மருத்துவமனை சுவர் இடிந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் மனதை உலுக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.





கருத்துக்கள்