advertisement

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் 3.95 கோடி

மே 01, 2026 8:24 முற்பகல் |


திருச்செந்தூர் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், சுமார் 3.95 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் கடந்த புதன்கிழமை, கோயில் தக்காா் ரா. அருள்முருகன் தலைமையில் இணை ஆணையா் க. ராமு முன்னிலையில் நடைபெற்றது.  

பக்தர்கள் செலுத்திய காணிக்கையின் மொத்த விவரங்கள்  , ரூ. 3 கோடியே 95 லட்சத்து 64 ஆயிரத்து 510 பணம், 803 கிராம்  தங்கம், 17,765 கிராம் வெள்ளி, 26,300 கிராம் பித்தளை, 7,860 கிராம் தகரம், 3,340 கிராம் செம்பு, 944 தாள்கள் வெளிநாட்டுப் பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement