advertisement

திருவள்ளூர் - சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

ஏப். 29, 2026 4:35 முற்பகல் |

 

சென்​னை, திரு​வொற்​றியூரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்​து, திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்பு அளித்​துள்​ளது.

சென்​னை, திரு​வொற்​றியூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் கபிலன் (23). இவர் தன் வீட்​டின் அருகே வசித்து வந்த 13 வயது சிறுமி​யிடம், வீட்​டிலிருந்து பணத்தை எடுத்து வரு​மாறு கூறி​யுள்​ளார்.இதையடுத்​து, பணத்​துடன் வந்த சிறுமியை கபிலன் தன் வீட்​டுக்கு கடத்தி சென்று பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார்.

இதுகுறித்து சிறுமி​யின் பெற்​றோர் அளித்த புகாரின் பேரில், திரு​வொற்​றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அதன் அடிப்​படை​யில் போலீ​ஸார், போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்து கபிலனை கைது செய்​தனர்.இந்த வழக்கின் விசா​ரணை, திரு​வள்​ளூர் மாவட்ட சிறப்பு போக்சோ நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. அரசு தரப்​பில் வழக்​கறிஞர் புவனேஸ்​வரி ஆஜராகி வாதாடி​னார்.முடிவுக்கு வந்த வழக்கு விசா​ரணை​யில், கபிலன் மீதான குற்​றம் நிரூபண​மானது. இதையடுத்​து, நேற்று முன் தினம் மாலை மாவட்ட சிறப்பு போக்சோ நீதி​மன்ற உமா மகேஸ்​வரி தீர்ப்பு அளித்​தார்.

அதில், கபிலனுக்கு சிறுமியை கடத்​திய குற்​றத்​துக்​காக 10 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை, பாலியல் வன்​கொடுமை செய்த குற்​றத்​துக்கு 10 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை, ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்டது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement