பரமக்குடி நகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு.
ஏப். 28, 2026 6:22 முற்பகல் |
ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி நுகர்வோ உரிமை பாதுகாப்பு கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில் , 2026_2027ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று தலைவராக ஓய்வு பெற்ற பேராசிரியர் பாலசுப்பிரமணியன் , செயலாளராக ஓய்வு பெற்ற தாசில்தார் சேகரன் , பொருளாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தினவேல் , துணைத் தலைவராக ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன் , இணைச் செயலாளராக ஓய்வு பெற்ற கூட்டுறவு அலுவலர் டி பி ராஜகோபால் உள்பட 6 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தீர்மானத்தின் அடிப்படையில் உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் நிர்வாகி லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ரத்தினவேல் நன்றி கூறினார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்