advertisement

திருச்செந்தூர் முருகனை தரிசித்த விஜய்

ஏப். 28, 2026 4:19 முற்பகல் |

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று காலை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்த விஜய், அங்கிருந்து இன்று அதிகாலை சாலை மார்க்கமாகப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடைந்தார். அவருக்குத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வழிநெடுகிலும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

 தொடர்ந்து விஜய், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை  தரிசனம் செய்தார். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.  விஜய் வருகை குறித்த தகவல் அதிகாலையிலேயே பரவியதால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். அவரைக் காண மக்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement