advertisement

வாக்கு எண்ணும் மையத்தில் 'ஜனநாயகன்' படம் பார்த்த ஊழியர் கைது

ஏப். 28, 2026 4:28 முற்பகல் |

 

தமிழக சட்டசபைக்கான தேர்தல் கடந்த 23-ம் தேதி ஒரே கட் டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்களித்தனர். விறுவிறுப்பாக நடந்த இந்த வாக்குப்பதிவு முடிவில் தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத வகையில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் சட்டவிரோதமாக 'ஜனநாயகன்' படம் பார்த்த சிசிடிவி மெயின்டனன்ஸ் ஊழியர் யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து, 'ஜனநாயகன்' படம் பார்த்ததை அவரே சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், ஒப்பந்த ஊழியரான அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement