advertisement

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

மே 01, 2026 8:20 முற்பகல் |

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாகத் தகவல்கள் பெறவும், புகார்களை அளிக்கவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் : தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பதிவான வாக்குகள், வரும் மே 4-ஆம் தேதி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்கு முன்பாகவே பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை செயல்பட வேண்டும். அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டுப்பாட்டு அறை இன்று (மே 1) முதல் மீண்டும் தனது பணியைத் தொடங்கியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறியவும், புகார்களைத் தெரிவிக்கவும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

    கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-599-1960

    மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை: 0461-1950 தேர்தல் முடிவுகள் குறித்த தகவல்களை வழங்குவதற்கும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement