தூத்துக்குடி கொலை வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம்
குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (22) என்பவர் சம்பந்தப்பட்டிருந்தார். இவரது தொடர்ச்சியான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக, அவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்கக் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை செய்தார்.
தூத்துக்குடி எஸ்பி., மதன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தனைத் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, குலசேகரன்பட்டினம் போலீசார் கோவிந்தனை இன்று கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.





கருத்துக்கள்