தூத்துக்குடி வ.உ.சி.சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
தூத்துக்குடியில் வ.உ.சி. 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்டத் தியாகி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் முழு திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத் திமுக சார்பில், வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.





கருத்துக்கள்