தூத்துக்குடி செப்.12-ல் லோக் அதாலத்
தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் வருகிற 12-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்டமுதன்மை நீதிபதி சுபாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சுபாதேவி தலைமயில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
இதில் அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள் (மீண்டும் இணைந்து வாழுதல்), வங்கிக் கடன் வழக்குகளும், குற்றவியல் கோர்ட்டுகளில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகளும் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன.
எனவே தேசிய மக்கள் நீதிமன்றம் வழக்காடிகள், எதிர் வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.





கருத்துக்கள்