தென்காசி மாவட்டத்தில் அக் 5 ம் தேதி மின் தடை அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, சங்கரன்கோவில், சாம்பவர் வடகரை, தென்காசி, பெருமாள்பட்டி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் 05.10.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உபமின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி செங்கோட்டை, சங்கரன்கோவில், சாம்பவர் வடகரை, தென்காசி, பெருமாள் பட்டி உபமின் நிலையத்தில்அக்டோபர் 5 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செங்கோட்டை உப மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
தென்காசி, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில்மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம்,சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M. C பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உபமின் நிலையத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத்தூர், இராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம். கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஊர்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
கருத்துக்கள்