advertisement

நேபாள வெள்ளப்பெருக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 200ஐ தாண்டியது

ஆக. 27, 2026 5:13 முற்பகல் |

 

வடக்கு நேபாளத்தில், ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக எல்லை நதி ஒன்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இத்துயரச் சம்பவத்தில் இதுவரை 162 பேர் உயிரிழந்ததுடன், சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.இந்த தகவல் அறிந்ததும் நேபாள ராணுவம் மற்றும் போலீசார் உடனடியாக மீட்பு பணியில் களம் இறங்கினர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால், பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்தநிலையில், வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நேபாளம் மற்றும் திபெத் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமானோரின் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அச்சம் நிலவுகிறது.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 93 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மோசமான வானிலை மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுற்றுலா பயணிகள் 500 பேர் வெள்ளத்துக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் 291 பேர் வெளிநாட்டினரும், 32 பேர் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர்.வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரும் இருப்பதாக தெரியவந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த கைலாஷ் மானசரோவர் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த 57 பேரும் சென்றிருந்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement