2011 தேர்தல் முடிவுகள் மீண்டும் திரும்பும் - ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கை!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு வருவதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வந்து அதிமுக அரசு பதவியேற்கும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அத்துடன் நிகழ்வில் பேசிய அவர் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு பிரச்சினை உச்சத்தில் இருந்தது. அதனால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். இதன் காரணமாக 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக படு தோல்வியடைந்தது. தற்போதுள்ள திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் இருப்பதால் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.அதிமுக ஆட்சியில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது அமைச்சர்கள் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு வாங்கிக் கொடுத்தோம். இன்றைய ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த இளைஞன் ரூ.ஆயிரம் கோடி செலவில் சினிமா தயாரிக்க முயற்சி செய்துள்ளார். அதற்கு தகுதி அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறவினர். மு.க.முத்து மகள் வழி வந்த பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார் என்பதே.இதை உன்னிப்பாக கவனிக்கும் மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதை மடைமாற்றம் செய்யும் வகையில் விளம்பரத்தை அச்சாணியாக வைத்து அரசு சுற்றிக் கொண்டிருக்கிறது. விளம்பர அரசு நிலைத்ததாக வரலாறு இல்லை” என தெரிவித்தார்
கருத்துக்கள்