advertisement

ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பதற்கான புதிய விதிகள் அமல்

மே 02, 2025 4:38 முற்பகல் |

 இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பதற்கான புதிய விதிகள் இன்று (மே 1) முதல் அமலுக்கு வந்தன. பரிந்துரையை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரி செலுத்த வேண்டும்.

ஏ.டி.எம்.,களில் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை, அதிகரித்துக் கொள்ள, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதன்படி, ஒரு வங்கியின் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்.,மில், பணம் எடுப்பதற்கான கட்டணம் வசூல் இன்று முதல் அமலுக்கு வந்தது.கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்., சேவைக்கும், மற்ற வங்கி ஏ.டி.எம்., பயன்படுத்துவதில் மெட்ரோ நகரங்களில் ஐந்து முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் மூன்று முறையும் கட்டணம் வசூலிக்கப்படாது.

அதேநேரத்தில் பரிந்துரையை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரி செலுத்த வேண்டும். ரொக்கம் அல்லாத ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளான பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு, 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 6 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த புதிய நடைமுறை இன்று (மே 1) முதல் அமலுக்கு வந்தது. இலவச வரம்பைத் தாண்டி ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க, தேவையற்ற பணம் எடுப்பதைக் கட்டுப்படுத்துவது நல்லது. டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கலாம்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement