advertisement

சங்ககிரியில் கொலை சம்பவம் கைதான 2 பேர் மீது குண்டாஸ்

மே 06, 2025 11:02 முற்பகல் |

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணர் ராஜேந்திரன்  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான இருவருக்கும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடந்த மார்ச் 30ஆம் தேதி, சங்ககிரி பகுதியில் ராஜேந்திரன் என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, கோழிக்கால் நத்தம் பகுதியை சேர்ந்த லோகபிரகாஷ் (21) மற்றும் சங்ககிரி தாலுகா, கஸ்தூரிபட்டியை சேர்ந்த சசிகுமார் (22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய சேலம் எஸ்.பி. கவுதம் கோயல் மற்றும் கலெக்டர் பிருந்தா தேவிக்கு பரிந்துரை செய்தனர். 

அவர்களின் பரிந்துரையைத் தொடர்ந்து, நேற்று இந்த இருவருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை செய்தபடி, லோகபிரகாஷ் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கு குண்டர் சட்டம் மூலம் கைது செய்யப்பட்டனர், மற்றும் இந்த உத்தரவை சேலம் மத்திய சிறையில் வழங்கப்பட்டது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement