advertisement

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றம்;

மே 06, 2025 11:54 முற்பகல் |

 

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டு மட்டும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,21,057 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இதில் முதல் நாளி 11,430 பேர் தேர்வெழுத வரவில்லை. இந்நிலையில், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் (TN 12th Result 2025) வரும் 09.05.2025 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னரே மே 8-ம் தேதி காலை 9 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் தெரிந்துகொள்ளுவது எப்படி?
தமிழ்நாடு பொதுத்தேர்வு மாணவர்கள் அதிகாரப்பூர்வ www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இவையில்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்கள் தேர்விற்கு கொடுத்த மொபைல் எண்ணிற்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement