advertisement

ஓமலுார் -2 காதல் ஜோடிகள் மகளிர் போலீஸில் தஞ்சம்

மே 06, 2025 9:07 முற்பகல் |

 

காதல் திருமணங்களில் பாதுகாப்பு கருதி, ஒரே நாளில் மூன்று காதல் ஜோடிகள் ஓமலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்

மேட்டூர் தாலுகா ஊஞ்சம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (23) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவை சேர்ந்த கீதா (21) இடையே கடந்த ஓராண்டாக நீண்ட காதலாக இருந்து வந்தது. அவர்கள் மாதநாயக்கன்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, நேரடியாக ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்தனர்.

மூன்றாவது மேட்டூர் நேரு நகரைச் சேர்ந்த கலைவாணி (19) மற்றும் பெரும்பாலை இளநகர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார் (22) இடையே காதல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர், அவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மகளிர் போலீசில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், கலைவாணியின் தாயார் இந்துமதி (38), தனது மகள் காணவில்லை என ஓமலூர் போலீசில் புகார் அளித்திருந்ததால், அவர்கள் மீண்டும் ஓமலூர் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement