advertisement

செந்தியம்பலத்தில் சீரான குடிநீர் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மே 06, 2025 9:37 முற்பகல் |

 

சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமத்தில் சீரான குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். 

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28 ம் தேதியில் இருந்து சீராக தண்ணீர் அளிக்கப்படவில்லை. சாயர்புரம் இஞ்ஞினியரிங்க கல்லூரி எதிர்ப்புறம் உள்ள போரில் இருந்து வரும் தண்ணீர் இப்பகுதிக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு மோட்டார் மூலம் தண்ணீர் அளிக்கப்பட்டால் தான் இப்பகுதியில் தண்ணீர் சீராக விநியோகிக்கபடும்.

ஆனால் கடந்த ஒரு வாரமாக ஒரு மோட்டார் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. ஊராட்சி நிர்வாகத்திற்கு கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கபடவில்லை. மேலும் இந்த பகுதியோடு சேர்ந்த நம்மாழ்வார் நகரில் கடந்த  ஆறு நாளாக தண்ணீர் விடபடவில்லை. கடந்த 10 வருடமாக புதிய மேல் நிலைதேக்க தொட்டி வேண்டும் என்று மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக அலைந்து கடும் சிரமங்கள் அடைந்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் 10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தங்கம்மாள் புரம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து குடிக்க தண்ணீர் வேண்டும் என்று அளித்த மனுவிற்கு இதுவரை நடவடிக்கை இல்லை என்றும் சீரான குடிநீர் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement