advertisement

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!

மே 06, 2025 6:12 முற்பகல் |

 

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாட்டுத்தாவணி MGR பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நடைபாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் பொருட்களை ஒழுங்காக வைக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement