சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சுப்ரீம்கோர்ட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் சொத்து விவரங்களை நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.தற்போது சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 21 பேரின் சொத்துகள், அது பற்றிய விவரங்கள் இணைய தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கின்றன.கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் 2 பெண் நீதிபதிகளில் ஒருவர் சொத்து மதிப்பு விவரங்களை தெரிவித்துள்ளார். அனைத்து சொத்து மதிப்பு விவரங்களும் சுப்ரீம்கோர்ட் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த சொத்துகளில் நீதிபதிகளின் சொத்துகள், அவர்களது வாழ்க்கை துணையின் சொத்து மதிப்புகள், குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், தங்கம், பங்குச்சந்தைகளில் முதலீடு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.இதுகுறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது;
ஏப்.1, 2025 அன்று நீதிமன்றத்தின் நீதிபதிகள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெறப்பட்ட நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. எஞ்சிய நீதிபதிகளின் சொத்து விவரங்களும் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது
கருத்துக்கள்