advertisement

சத்தியமங்கலம் அருகே மான் கறி விற்ற 2 பேர் கைது!

மே 06, 2025 8:52 முற்பகல் |

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மான் கறி விற்றதாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் நரசாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மான் கறி விற்பனை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் நரசாபுரம் பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் புகுந்து சோதனையிட்டனர்.

அப்போது, அங்கு சுமார் 10 கிலோ மான் கறியை கூறுகளாக போட்டு பாலித்தீன் பைகளில் போட்டு விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சாந்தி (40) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சுஜில்கரையை சேர்ந்த குமார் (வயது 25) என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும், இதில் தொடர்புடைய நரசாபுரத்தை சேர்ந்த பாலு (வயது 19), தமிழ்செல்வன் (வயது 22) ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement