advertisement

கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் மின்கசிவால் புகைமூட்டம்; 04 பேர் உயிரிழப்பு..!

மே 03, 2025 3:28 முற்பகல் |

 

கேரளா கோழிக்கோட்டில் அமைந்த மருத்துவ கல்லூரியில் மின்கசிவு ஏற்பட்டதில், இதன் தொடர்ச்சியாக புகைமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 04 பேர் மூச்சு திணறி பலியாகியுள்ளனர். 

இது குறித்து அம்மாநில எம்.எல்.ஏ. சித்திக் , வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பேட்டா மெப்படி பகுதியை சேர்ந்த 44 வயதுடைய நசீரா என்பவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்தபோது, புகைமூட்டம் அதிகரித்த நிலையில், வேறு இடத்திற்கு அவரை கொண்டு செல்ல முயன்றபோது அவர் பலியாகியுள்ளார்.

இந்த சம்பத்தில் அந்த மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் பலரும், மருத்துவ உபகரணங்களுடன் வேறு பகுதிக்கு தூக்கி செல்லப்பட்ட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட்டுள்ளதாக மருத்துவமனையின் சூப்பிரெண்ட் கூறியுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement