advertisement

ஒடிசாவில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்!

ஜூலை 02, 2025 5:25 முற்பகல் |


 
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பள்ளிக் கழிவறைக்குள் கை கால்களை கட்டிப்போட்டு 7ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஜூன் 15-ஆம் தேதி கோபால்பூர் கடற்கரையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது தூரத்து உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி தாய் அளித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியை வலுக்கட்டாயமாக பள்ளியின் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, அவளது கைகளையும் கால்களையும் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் ஜூன் 28-ஆம் தேதி நிகழ்ந்ததாகவும், ஜூன் 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

குற்றம் சாட்டப்பட்ட 22 வயது இளைஞர் கோலந்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.இது அந்தப் பகுதியில் நடக்கும் இரண்டாவது பாலியல் வன்கொடுமை சம்பவமும், ஒரே மாதத்தில் மாவட்டத்தில் நடக்கும் மூன்றாவது சம்பவமும் ஆகும்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கும் 11 வயது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, சிறுமியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் தூரத்து உறவினர் மற்றும் இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement