advertisement

கேரளா : ஹோட்டலில் சாப்பிட்ட குடும்பத்தினர் 2 பேர் பலி,

பிப். 18, 2026 9:46 முற்பகல் |

 

கேரள மாநிலம் கொல்லம்  பகுதியை சேர்ந்த 48 வயதான ஷாஜி, அவரது மனைவி சஜினா மற்றும் 58 வயதான மாமியார் ரஷீதா பீவி, தங்கள் இரண்டு குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் உணவுக்காக சென்றனர்.

அந்த ஓட்டலில் கார் டிரைவர் உட்பட மொத்தம் ஆறு பேர் மீன்குழம்புடன் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.அங்கு சாப்பிட்டதைத் தொடர்ந்து வீட்டிற்கு பயணம் செய்யும் வழியில் திடீரென ஷாஜி, சஜினா மற்றும் ரஷீதா பீவிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.மேலும், அவசர நிலையில் மூவரையும் பாரிப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த தீவிர சிகிச்சை வழங்கப்பட்டதற்கும் பிறகும், ஷாஜி மற்றும் ரஷீதா பீவி உயிரிழந்தனர். மேலும், சஜினா மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பப்பட்டார்.இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement