advertisement

மனைவியை கொன்ற முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கைது

பிப். 19, 2026 10:38 முற்பகல் |

பெங்ளூருவில் உள்ள பொம்மனஹள்ளியில்  நாகேஷ்வர் ராவ் (72) ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி. இவர் தனது மனைவி சந்தியா (65) உடன் வசித்து வந்தார். இவர்களின் மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் நாகேஷ்வர் ராவுக்கும் அவரது மனைவி சந்தியாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் தனது மகளை தொடர்புக் கொண்டு, நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனடியாக அவர், மருத்துவர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

படுக்கை அறையில் பேச்சு மூச்சின்றி கிடந்த சந்தியாவின் உடலை பரிசோதித்த மருத்துவர், அவர் உயிரிழந்ததை உறுதி செய்தார். அதேவேளையில் கழுத்தை நெரித்ததற்கான ரத்த காயங்கள் இருப்பதை அறிந்து மருத்துவர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு சென்ற ஆவலஹள்ளி போலீஸார், நாகேஷ்வர் ராவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தனது மனைவி சந்தியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement