advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை - டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிப். 27, 2026 7:03 முற்பகல் |

 

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரை விடுவித்து ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 27) அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் மதுபானக் கொள்கையில் சதி நடந்திருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மணீஷ் சிசோடியா தரப்பில் எந்தவொரு ‘குற்ற நோக்கமும்’ இருந்ததற்கான ஆதாரம் இல்லை எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

மேலும், “ஒரு முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுக்கும் அரசு முடிவுகளை, போதிய ஆதாரங்கள் இல்லாமல் வெறும் ‘சதித் திட்டம்’ என்று முத்திரை குத்திவிட முடியாது,” என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சட்டம் ஒருவரைத் தண்டிக்க வேண்டுமென்றால், அவரிடம் ‘குற்ற நோக்கம்’ இருந்திருக்க வேண்டும். மனிஷ் சிசோடியா தரப்பில் அப்படி எந்த ஒரு தனிப்பட்ட லாபத்திற்காகவோ அல்லது கெட்ட எண்ணத்துடனோ செயல்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று நீதிபதி கூறினார்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளை, போதிய சான்றுகள் இல்லாமல் குற்ற சதி என்று அழைப்பது சட்டப்படி செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement