advertisement

துபாயில் சிக்கித் தவித்த பி.வி.சிந்து வீடு திரும்பினார்

மார். 03, 2026 11:30 முற்பகல் |


 
அணுசக்தி பதற்றத்தை மையமாகக் கொண்டு ஈரான் மீது இஸ்ரேல்–அமெரிக்கா கூட்டணி தொடர்ந்து மூன்று நாட்களாக ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் சூழல் அதிகரித்து, பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.இந்த தாக்குதல்களின் நேரடி தாக்கம் பொதுமக்களின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது.

மேலும், விமான நிலைய வளாகத்தை சுற்றி வெடிச்சத்தங்கள் கேட்டதால் பயணிகள் மத்தியில் கடும் அச்சம் நிலவியது.இந்த சூழ்நிலையால், இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து துபாயில் சிக்கிக் கொண்டு நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டார்.

சில நாட்கள் உறுதியற்ற சூழலில் காத்திருந்த அவர், தற்போது பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளார்.இதுகுறித்து அவர் ‘X’ தளத்தில் பதிவிட்டதாவது, “பத்திரமாக பெங்களூருவில் உள்ள என் வீட்டிற்கு திரும்பிவிட்டேன்.கடந்த சில நாட்கள் மிகவும் பதற்றமாகவும் நிச்சயமற்றதாகவும் இருந்தது. எனினும் பாதுகாப்பாக வீடு திரும்பியதற்கு நன்றியுணர்ச்சி மிகுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.


 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement