advertisement

காதலியை வெட்டி பிரிட்ஜில் வைத்த ராணுவ வீரர்

மார். 31, 2026 5:28 முற்பகல் |

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்கடற்படையில் (Navy) பணிபுரியும் ரவீந்திரா (35) என்பவர், தனது காதலி மௌனிகாவை (29) கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீட்டில் உள்ள பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.என்.எஸ் தேகா பிரிவில் ரவீந்திரா ஊழியராகப் பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கும், மௌனிகா என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகத் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ரவீந்திராவின் மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட ரவீந்திரா, மௌனிகாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.

கொலை செய்த பின் உடலை மறைக்கத் திட்டமிட்ட ரவீந்திரா, மௌனிகாவின் உடலைக் கூர்மையான ஆயுதத்தால் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். உடலின் ஒரு பகுதியை வீட்டில் இருந்த பிரிட்ஜில் (Refrigerator) வைத்தும், மற்றொரு பகுதியை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி அப்புறப்படுத்தவும் முயன்றுள்ளார். பல நாட்களாக அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் வீட்டை அதிரடியாகச் சோதனை செய்தபோது, பிரிட்ஜிற்குள் வைக்கப்பட்டிருந்த மௌனிகாவின் உடல் பாகங்களைக் கண்டு உறைந்து போயினர். உடலின் தலைப்பகுதி இன்னும் கண்டறியப்படவில்லை; அதனை ரவீந்திரா வேறு எங்கோ வீசியிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது ரவீந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணையில், தனது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்திலும், மௌனிகா கொடுத்த நெருக்கடி காரணமாகவும் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement