சிஎஸ்கே “தோல்விக்கு நானே காரணம்” -கேப்டன் ருதுராஜ்
ஏப். 06, 2026 5:46 முற்பகல் |
சென்னை: ஞாயிற்றுக்கிழமை அன்று சிஎஸ்கே அணியை 43 ரன்களில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்த தோல்விக்கு தானே காரணம் என பொறுப்பேற்றுள்ளார் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி உடன் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடியது. 251 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே, 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது இந்த சீசனில் அந்த அணிக்கு ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே-வுக்கு இது 7-வது தொடர் தோல்வியாக அமைந்தது.
தோல்விக்கு பிறகு ருதுராஜ் கூறியதாவது: “நாங்கள் பேட் செய்தபோது எனது பங்களிப்பை சற்று கூடுதலாக வழங்கியிருந்தால் நிச்சயம் இந்த ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் எங்கள் தோல்விக்கு நானே காரணம்
என்றார்.





கருத்துக்கள்