கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா பயணம்!
மே 22, 2025 5:16 முற்பகல் |
பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களை இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் அழித்ததையடுத்து, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச அளவில் வலியுறுத்தும் வகையில் 7 குழுக்களும் உருவாக்கப்பட்டன. இதில், ஒவ்வொரு குழுக்கும் மக்களவை எம்பிக்கள் தலைமையிலான அமைப்பேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு, இன்று ரஷியாவுக்கு புறப்பட உள்ளது. இந்த குழு, ரஷியாவில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, இந்தியாவின் எதிர்ப்பார்ப்புகள் மற்றும் நிலைப்பாடுகளை விளக்க ஆலோசனை நடத்தவுள்ளது.
ரஷியாவுக்குப் பின், கனிமொழி தலைமையிலான குழு ஸ்பெயின், கிரீஸ், சிலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்