கர்நாடகாவில் கமல்ஹாசன் உருவ பொம்மை எரிப்பு
கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு எதிராக தொடரும் போராட்டத்திற்கு மடாதிபதிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கமல்ஹாசனின் உருவப்படத்தை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னட மாெழி குறித்து கமல்ஹாசன் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி, தொடர்ந்து ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கன்னட அமைப்பினரும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் இதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கூற முடியாது என தெரிவித்துள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லரியில் கன்னட அமைப்பினார் 50க்கும் மேற்பட்டோர் கமல்ஹாசன் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், எட்டி உதைத்ததோடு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கமலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துக்கள்