யார் அந்த சார் ஐ காப்பாற்றியது ? விடாமல் கேட்போம் : அதிமுக ஐடி விங் பதிவு
ஜூன் 02, 2025 12:17 பிற்பகல் |
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்த லட்சணத்தில் அண்ணா பல்கலை. வழக்கை கையாண்டது என்பதை அம்பலப்படுத்திய பாதிக்கப்பட்ட மாணவியின் வழக்கறிஞர்.FIR போட வேண்டாம் என்று எதற்கு சொன்னது திமுக அரசின் காவல்துறை? இதுவே ஒருவகை மிரட்டல் தானே?Medical Test எடுப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை?
பாதிக்கபட்ட பெண்ணின் தனிப்பட்ட உரிமைக்கும் உணர்வுகளுக்கும் கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல், பல்கலைக்கழகத்திற்கு இரண்டு ஆண் காவலர்கள் யூனிபார்மில் சென்று விசாரணை நடத்தியது எதற்காக? கேள்விகளுக்கு பதில் வரவில்லை- மாறாக, கேள்விகள் இன்னும் அதிகமாகவே செய்திருக்கின்றன.அதனால், நிச்சயம் விடாமல் கேட்போம் யார் அந்த சார் ஐ காப்பாற்றியது யார்?" என்று தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்