தமிழக தொழில்துறை தோல்விக்கு காரணமே திமுக அரசு தான்...! - எடப்பாடி பழனிச்சாமி
ஜூன் 30, 2025 7:48 முற்பகல் |
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான 'எடப்பாடி பழனிசாமி' ள், தமிழக தொழில்துறை தோல்வியடைந்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதாவது,"திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாண்டிச் செல்லத் தவறியதால், நமது தொழில்துறை இயந்திரம் செயலிழந்து போயுள்ளது.
நமது தொழில்முனைவோர் காத்திருக்கிறார்கள். நமது இளைஞர்கள் இடம்பெயர்கிறார்கள். நமது முதலீட்டாளர்கள் வேறு இடத்திற்கு செல்கிறார்கள்.இதை மாற்ற அதிமுக உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு தலைமை தாங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதுவே சரியான நேரம்" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்