ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் மாமியார் திடீர் கைது
வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த கைகாட்டிபுதூரைச்த்தை சேர்ந்தவர்கள் அண்ணாதுரை ஜெயசுதா. இவர்களுக்கு ரிதன்யா என்ற மகளும் , ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் தனது மகளுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள கிருஷ்ணனின் பேரன் கவின் குமாருக்கு ரிதன்யாவை திருமணம் செய்து வைத்து உள்ளனர். திருமணத்தின் போது 500 சவரன் வரதட்சணையாக கொடுப்பதாக பெண்வீட்டார் கோரி இருந்த நிலையில் 300 சவர நகை மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வால்வோ காரை வழங்கியுள்ளனர்.
திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில் ரிதன்யா கடந்த 28ஆம் தேதி அன்று ஒண்டிபாளையம் பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில் சேயூர் அருகே சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு தென்னை மரங்களுக்கு தெளிக்கப்படும் மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரிதன்யா தற்கொலை செய்து கொள்ளும் முன் ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தன்னை வரதட்சணை கேட்டு மாமியார் சித்ராதேவி, மாமனார் கொடுமைப்படுத்துவதாகவும் , கணவர் கவின்குமார் உடல் அளவிலும் மனதளவிலும் கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். இதற்கு மேல் தன்னால் வாழமுடியாது என்றும், நகரவேதனையை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். என்னுடைய தற்கொலைக்கு மாமனார் , மாமியார் மற்றும் கணவர் கவின்குமார் தான் காரணம் எனத் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து ரிதன்யாவின் உறவினர்கள் தற்கொலைக்கு நீதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணவர் கவின்குமார், மாமனாரை கைது செய்தது.இதனை தொடர்ந்து ரிதன்யாவின் பெற்றோர் மாப்பிள்ளை கவின்குமார் மீது பகிரங்க குற்றசாட்டுகளை முன் வைத்தார். ரிதன்யாவிற்கு திருமணமான இரண்டு வாரங்களில் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. மீதமுள்ள 200 சவரன் நகை எப்போது தருவார்கள் என்றும் கவினுக்கு தொழில் தொடங்க பணம் தேவைப்படுகிறது. இதனை வாங்கி வருமாறு ரிதன்யாவை கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் தனது மகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தோம் என்று கூறினார். இந்த நிலையில் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே கணவர் கவின்குமார் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்