விழுப்புரத்தில் நூடுல்ஸ் சாப்பிட்ட வாலிபர் உயிரிழப்பு
விழுப்புரத்தில் சிக்கன் நூடுல்சை வாங்கி சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
சவர்மா சாப்பிட்டு உயிரிழப்பு, சிக்கன் சாப்பிட்டுஉயிரிழப்பு,பரோடா சாப்பிட்டுஉயிரிழப்பு என சமீப காலமாக செய்திகள் வெளிவந்தன என்பதனை நாம் அறியோம். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. விழுப்புரத்தில் சிக்கன் நூடுல்சை வாங்கி சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திருப்புகழ் வீதியை சேர்ந்தவர் கருணாநிதி மகன் மனோஜ்குமார் . 24 வயதான இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 3 நாட்களாக வயிற்றுப்போக்கு இருந்து வந்தது என கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் இருந்து சிக்கன் நூடுல்சை வாங்கி வந்து வீட்டில் வைத்து வயிறு முட்டும் அளவிற்கு விரும்பி சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் அவருக்கு திடீரென உடல் உபாதை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே மனோஜ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் மனோஜ்குமாரின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தபோது அவர் 3 நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் அளவுக்கு அதிகமாக நூடுல்சை சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இறந்திருப்பது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்