advertisement

தவெக., முதல்வர் வேட்பாளர் விஜய்... செயற்குழுவில் தீர்மானம்!

ஜூலை 04, 2025 8:56 முற்பகல் |

 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை முன்மொழிந்து அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4) நடைபெற்றத்து. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் உள்ளது.

இந்த மாதம் முதல் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டை நடத்த வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது. முதல்வர் வேட்பாளராக விஜயை முன்மொழியப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மேல் சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் தவெக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement