ராமநாதபுரம் வேளாண் சந்தை துண்ணறிவு கட்டட திறப்பு விழா
ராமநாதபுரம் வேளாண் சந்தை துண்ணறிவு, ஆலோசனை மைய கட்டட திறப்பு விழா நிகழ்வில் ராமநாதபுரம் ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்து விளக்கு ஏற்றி வைத்து 25 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சரால் வேளாண்மை உழவர் நலத்துறை , கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை காணொளிக்காட்சியின் மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ராமநாதபுரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண் விற்பனை , வேளார் வணிகத்துறை வளாகத்தில் ரூ.84 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் சந்தை நுண்ணறிவு , விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதை விவசாயிகள் பயன்பாட்டிற்கும், அதேபோல் போகலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ரூ.59 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சரால் காணொளிக்காட்சியின் மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து , ராமநாதபுரத்தில் வேளாண் விற்பனை , வேளாண் வணிகத்துறை வளாகத்தில் உள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு , விவசாயிகள் ஆலோசனை மைய கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்து வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை , வேளாண் பொறியியல் துறை மூலம் 25 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கினார்.
மேலும் , போகலூர் ஊராட்சியில் நடைபெற்ற கால்நடை மருந்தக சுட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.ரவிச்சந்திரன் , பரமக்குடி பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை பொறுப்பு இணை இயக்குநர் பாஸ்கரமணியன் , ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம் , வேளாண் விற்பனை , வேளாண் வணிகத்துறை செயலர்கள் கோபாலகிருஷ்ணன் , மல்லிகா , தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறுமுகம் , தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அருண்குமார் , தோட்டக்கலைத்துறை உதவி செயற்பொறியாளர் சிவகுமார் , தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் அண்ணாதுரை, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட வேளாண்மை துறையினர்,அரசு அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்