மயிலாடுதுறை அருகே த.வா.க. பிரமுகர் படுகொலை!
மயிலாடுதுறை அருகே காரில் சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட பொறுப்பாளர் மணிமாறன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பா.ம.க., செயலாளர் தேவமணி. 2022ம் ஆண்டு இவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன் மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு மீண்டும் காரில் காரைக்கால் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது வழியில் செம்பனார்கோவில் தனியார் பள்ளி அருகே மர்ம நபர்கள் வழிமறித்து காரை சேதப்படுத்தி மணிமாறனை சரமாரியாக வெட்டினர். இதில், தலை சிதைந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார், இறந்த மணிமாறன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மணிமாறன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்